அமெரிக்க தாக்குதலில் இருந்து பாதுகாக்க பாகிஸ்தான் விமான தளத்தில் ஈரான் போர் விமானங்கள்: உலக நாடுகள் அதிர்ச்சி

பாகிஸ்தான் ராணுவ தளத்தில் ஈரானிய விமானங்கள் ரகசியமாக நிறுத்தப்பட்ட தகவல் வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான மோதலில் ஒரு நடுநிலையான நாடாக பாகிஸ்தான் தன்னை உலக நாடுகளுக்குக் காட்டி வந்தது. இந்தநிலையில் ஒருபுறம் அமெரிக்காவுடன் இணக்கமாக இருப்பது போலக் காட்டிக் கொண்டு, மறுபுறம் ஈரானுடன் ரகசிய ராணுவ உறவைப் பேணி வருவதாகப் புகார்கள் எழுந்தன.

அமெரிக்க விமான தாக்குதலில் இருந்து தப்பிக்க பாகிஸ்தான் ராணுவத்தின் முக்கிய மையமான ராவல்பிண்டி அருகே உள்ள நூர் கான் விமானத் தளத்திற்கு ஈரானிய போர் விமானங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ள தகவல் வெளியானது. ராணுவ தளவாடங்களில், லாக்ஹீட் சி-130 ஹெர்குலிஸ் போக்குவரத்து விமானத்தின் உளவு மற்றும் புலனாய்வுத் துறை சார்ந்த வகையான ஈரானிய விமானப்படையின் ஆர்சி-130 விமானமும் அடங்கும். இதுபற்றி சி.பி.எஸ் நியூஸ் நிறுவனம் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுடன் போர் நிறுத்தத்தை அறிவித்த சில நாட்களிலேயே இந்த ரகசிய இடமாற்றம் நடந்துள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான சந்திப்பிற்காக டிரம்ப், சீனா செல்ல உள்ள நிலையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், ‘பாகிஸ்தான் ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் நாடாகக் காட்டிக் கொண்டு, ஈரானின் ராணுவ நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக உதவி வருகிறது’ என்று தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply