21 புலிகளுக்கு சிறை! தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு தடை! பிரான்சில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு: புனர்வாழ்வுக் கழகமும் தடை செய்யப்படலாம்!!

November 24th, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

பிரான்ஸில் வாழுகின்ற தமிழர் சமூகத்திடம் மிரட்டிப் பணம் பறித்த குற்றச் சாட்டின் கீழ் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த 21 பேருக்கு பிரஞ்சு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்ற பெயரில் இயங்கிய புலிகளின் அமைப்பை கலைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான போருக்காக பல லட்சக்கணக்கான யூரோக்களை இந்தக் குழுவினர் பிரான்ஸில் வாழும் தமிழ் மக்களிடம் மிரட்டிச் சேகரித்ததாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சிறீ-ரெலோவினர் அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட மக்களை சந்தித்தனர்.

November 24th, 2009 admin Posted in TELOnews No Comments »

வவுனியா இடைத்தங்கல் முகாமில் இருந்து அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட மக்களை கடந்த வாரம் சிறீ-ரெலோவினர் நேரில் சென்று பார்வையிட்டனர். துணுக்காய், மல்லாவி, மாங்குளம் போன்ற இடங்களில் மீள்குடியேறியோர்களின் குற்றம், குறைகளை கேட்டறிந்தனர். ’இவ்வளவு விரைவில் தமது சொந்த இடத்தில் குடியேறுவோமென கனவிலும்  நாம் நினைத்து இருக்க வில்லை’’ என சிலர் தமது மனதில் உள்ளதை வெளிப்படையாக தெரிவித்தனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

யாழ். குடாநாட்டில் போக்குவரத்திற்கு இடையூறான வீதித் தடைகள் நீக்கம்

November 19th, 2009 admin Posted in TELOnews No Comments »

யாழ். குடாநாட்டின் பல்வேறு இடங்களிலும் பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறாகக் காணப்பட்ட வீதித் தடைகள் யாவும் படையினரால் அகற்றப்பட்டு வருகின்றன. அத்துடன் யாழ். நகரப்பகுதி வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் காவலரண்கள் சிமெந்தினால் கட்டப்பட்டு புனரமைக்கப்பட்டு வருகின்றன. முன்னர் போக்குவரத்திற்கு இடையூறாகக் காணப்பட்ட இந்தக் காவலரண்கள் யாவும் இப்போது பின் நகர்த்தப்பட்டுச் சிமெந்தினால் அமைக்கப்பட்டு வருகின்றன.  ஏ-9 ஊடாக தனியார் வாகனங்கள் விரைவில் அனுமதிக்கப்படலாமென்பதால், வரும் மாதங்களில் யாழ். நகரப்பகுதியில் வாகன நெரிசல் அதிகமாகலாமென்பதை கருத்தில் கொண்டே மேற்படி வீதித் தடைகள் நீக்கப்படுவதாக படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

AddThis Social Bookmark Button

`வசந் – பரா` முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சிறீ ரெலோவினரால் திருமலையில் மாபெரும் மென்பந்து கிரிக்கெற் போட்டி

November 18th, 2009 admin Posted in TELOnews No Comments »

சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினால் (Sri – TELO ) `வசந் – பரா` இருவரதும் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருமலை மாவட்டத்தில் இளைஞர்களை வலுவூட்டும் முகமாக முன்னெடுக்கப்பட்ட மாபெரும் மென்பந்து கிரிகெற் போட்டி கடந்த 14ம், 15ம் திகதிகளில் பெரிய முத்தவெளி மைதானத்தில் நடாத்தப்பட்டது. ‘வசந் – பரா` வெற்றிக் கிண்ணத்துக்கான மென்பந்து கிரிக்கெற் போட்டியில் மொத்தம் 32 அணிகள் பங்கு பற்றி விழாவை சிறப்பித்தன.  Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கே எமது ஆதரவு: சித்தார்த்தன்

November 13th, 2009 admin Posted in TELOnews No Comments »

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான த. சித்தார்த்தன் தனது கட்சி அண்மையில் ஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசிய முன்னணிக்கு எதிர் வரும் தேர்தலில் ஆதரவு அளிக்காதென ஏரிக்கரை ஆங்கில ஊடகமான டெய்லி நீயூஸ்க்கு தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணக்கூடிய ஆற்றலுள்ளவரெனவும் தெரிவித்துள்ளார். (http://www.dailynews.lk/epaper/art.asp?id=2009/11/13/pg01_4&pt=p&h=)

AddThis Social Bookmark Button

ஜெனரல் சரத் பொன்சேகா தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்

November 12th, 2009 admin Posted in TELOnews No Comments »

ஜெனரல் சரத் பொன்சேகா முப்படைகளின் பிரதான அதிகாரி பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகா தனது பதவி விலகல் தொடர்பான தன்னிலை விளக்கத்தை இன்று ஊடகங்களுக்கு அறிவிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.

AddThis Social Bookmark Button

வடக்கின் வசந்தம் தொடர்பான வேலைத்திட்டங்கள் ஊடகங்களுக்கே தெரிவிக்காமல் இருட்டடிப்பு!

November 10th, 2009 admin Posted in TELOnews No Comments »

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வடக்கின் வசந்தம் தொடர்பான வேலைத்திட்டங்களை அரச அதிகாரிகள் ஊடகங்களுக்கே தெரிவிக்காமல் இருட்டடிப்புச் செய்வதாக ஞாயிறு (08.11.2009) காலை 10.30 மணியளவில் மன்னார் அரச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலில் மன்னார் பிரதேச ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவித்தனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மாந்தை பகுதிக்கு சிறீ-ரெலோவினர் விஜயம்

November 10th, 2009 admin Posted in TELOnews No Comments »

மன்னாரின் மாந்தை மேற்கில் மீள்குடியேறியிருப்பவர்களை சிறீ ரெலோ அமைப்பினர் இன்று நேற்று (09.11.2009) நேரில் சென்று பார்வையிட்டிருக்கின்றார். கடந்த மாதம் முதல் மன்னாரின் மாந்தை மேற்கில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது அப்பகுதிகளில் கடும் மழை பெய்து வருகின்றது. மன்னாரில் மழைக்காலம் ஆரம்பித்திருப்பதினால் மீள் குடியேற்றப்பட்ட மாந்தை மேற்குப்பகுதிகளில் மக்கள் சிரம்மங்களை எதிர் நோக்கியிருப்பதாகவும் தெரியவருகின்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சிறீ ரெலோ செயலாளர் நாயகம் ப. உதயராசா மன்னாரில் நிகழும் மீள்குடியேற்றத்தை பார்வையிட விடத்தல் தீவு விஜயம்

November 9th, 2009 admin Posted in TELOnews No Comments »

சிறீ ரெலோ செயலாளர் நாயகம் ப. உதயராசா அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மன்னார் மாவட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகள், மாட்டத்தின் பாதுகாப்புக் கெடுபிடிகள் மற்றும் பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (நவ. 08) காலை 10.30 மணிக்கு மன்னார் அரச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

செனல் 4 வீடியோ காட்சியின் உண்மைத் தன்மை

September 16th, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பிரித்தானிய செனல் 4 தொலை காட்சியில் ஒளிப்பரப்பான வீடியோ காட்சியின் உண்மைத் தன்மை இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன் உண்மையான காட்சி இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

AddThis Social Bookmark Button

யாழ். மாநகர சபையை விட வவுனியா நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்கு வீதம் குறைவானது

August 13th, 2009 admin Posted in TELOnews No Comments »

யாழ். மாநகர சபைத் தேர்தலில் அளிக்கப்பட்ட 22, 280 வாக்குகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குகள் 8008 என்பது 35.9% ஆகும். ஆனால் வவுனியா நகர சபைத் தேர்தலில் அளிக்கப்பட்ட 12, 850 வாக்குகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குகள் 4280 என்பது 33.3% ஆகும். யாழ். மாநகர சபையை விட வவுனியா நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்கு வீதம் குறைவானது என்பதையே மேற்படி புள்ளி விபரம் எடுத்துக் காட்டுகிறது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வெற்றிலைச் சின்னத்தில் வவுனியாவில் போட்டியிட்ட சிறீ- ரெலோக்கு அதிக வாக்குகள்

August 13th, 2009 admin Posted in TELOnews No Comments »

வவுனியா நகர சபைத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் கட்சிகளில் சிறீ – ரெலோக்கு 1501 விருப்பு வாக்குகள் கிடைத்துள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்ப்பில் அதி கூடிய விருப்பு வாக்குகள் பெற்று வவுனியா நகர சபைக்கு எம். எஸ். எம். பாரி என்பவர் தெரிவாகியுள்ளார். இவர் பெற்ற விருப்பு வாக்குகள் 2270 ஆகும். இரண்டாவதாக லலித் என்பவர் 964 விருப்பு வாக்குகள் பெற்று தெரிவாகியுள்ளார். மூன்றாவது இடத்தில் சிறீ- ரெலோ செயலதிபர் ப. உதயராசா 955 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார். நான்காவதாக சிறீ- ரெலோ சார்பில் போட்டியிட்ட சோ. சிவகுமார் 546 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இப்போது வாவிமகள்.கொம் சீர்செய்யப்பட்டு விட்டது

August 9th, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

கனம் இணையத்தள ஆசிரியர் அவர்களுக்கு வாவிமகள் இணையத்தள ஆசிரியரும் உரிமையாளருமாகிய கதிர் அறியத்தருவது என்னவென்றால் கடந்த சில நாட்களுக்கு முன் வாவிமகள்.கொம் இணையத்தளம் தொழிநுட்ப கோளாறு காரணமாக செய்திகளை மக்களுக்கு வழங்குவதில் தடங்கல் ஏற்ப்பட்டிருந்தது. தற்போது வாவிமகள்.பொமில் ஏற்பபட்ட தொழிநுட்ப பிரச்சனை சீர் செய்யப்படட்டு மக்களுக்கு செய்திகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

யாழ். மாநகரசபைக்கான சிறீ ரெலோ உள்ளடங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்புமனுவை அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தாக்கல் செய்தார்

June 24th, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

எதிர்வரும் யாழ். மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்றையதினம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தது. சிறீ ரெலோ உள்ளடங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் மேற்படி வேட்புமனுவை யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் குகநாதனிடம் நேரடியாக கையளித்தார். இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் யாழ். செயலகத்தில் வேட்புமனு கையளிப்பு இடம்பெற்றபோது சிறீ ரெலோ தலைவர் உதயன் அவர்களும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

AddThis Social Bookmark Button

புலிகள் மீதான தடையை மேலும் 5 வருடங்கள் நீடித்தது அமெரிக்கா

June 24th, 2009 admin Posted in TELOnews No Comments »

புலிகளின் சர்வதேசப் பிரிவின் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் `நாடு கடந்த தமிழீழ அரசு` அமைக்கப்படுமென அறிவித்துள்ள நிலையில், புலிகள் மீதான தடையை மேலும் 5 வருடங்கள் நீடிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டிலில் புலிகள் அமைப்புத் தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button