யாழ். குடாநாட்டில் போக்குவரத்திற்கு இடையூறான வீதித் தடைகள் நீக்கம்
யாழ். குடாநாட்டின் பல்வேறு இடங்களிலும் பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறாகக் காணப்பட்ட வீதித் தடைகள் யாவும் படையினரால் அகற்றப்பட்டு வருகின்றன. அத்துடன் யாழ். நகரப்பகுதி வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் காவலரண்கள் சிமெந்தினால் கட்டப்பட்டு புனரமைக்கப்பட்டு வருகின்றன. முன்னர் போக்குவரத்திற்கு இடையூறாகக் காணப்பட்ட இந்தக் காவலரண்கள் யாவும் இப்போது பின் நகர்த்தப்பட்டுச் சிமெந்தினால் அமைக்கப்பட்டு வருகின்றன. ஏ-9 ஊடாக தனியார் வாகனங்கள் விரைவில் அனுமதிக்கப்படலாமென்பதால், வரும் மாதங்களில் யாழ். நகரப்பகுதியில் வாகன நெரிசல் அதிகமாகலாமென்பதை கருத்தில் கொண்டே மேற்படி வீதித் தடைகள் நீக்கப்படுவதாக படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply