2000க்கு மேற்பட்ட மக்கள் இராணுவம் விடுவித்த பிரதேசத்துக்குள் வருகை; 6000க்கு மேற்பட்ட மக்கள் தப்பி வெளியேறி களப்புக் கடல் நீரில் அந்தரிப்பு

May 14th, 2009 admin Posted in TELOnews No Comments »

முள்ளிவாய்க்கால் பகுதியில் புதிதாக அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்தில் புலிகள் பணயமாக வைத்துள்ள பொது மக்களை விடுவிக்கும் மனிதாபிமான மீட்டுப் பணியின் இறுதி அத்தியாயத்தில் படையினர் இறங்கியுள்ளனர். வெள்ளமுள்ளி வாய்க்கால், கரையாமுள்ளி வாய்க்கால் பகுதிகளை நோக்கி இரு திசைகளிலும் இராணுவம் இன்று ( மே 14) முன்னேறி, புதிய பாதுகாப்பு வலயத்தில் புலிகளால் யுத்த கேடயமாக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுசனத்தில் 2000க்கு மேற்பட்ட மக்கள், பாதுகாப்பாக வெளியேறக் கூடிய சூழலை ஏற்படுத்தினர். புதிய பாதுகாப்பு வலயத்தை நோக்கிய இராணுவத்தின் வருகையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி 6000க்கு அதிகமான மக்கள் களப்புக் கடல் ஊடாக வெளியேறிவருவதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

அதிர்வு, தமிழ்வின் படங்களுடன் வெளியிட்ட செய்தி பொய்யானது.

May 14th, 2009 admin Posted in TELOnews No Comments »

அதிர்வு (athirvu.com) மற்றும் தமிழ்வின் (tamilwin.com) போன்ற தமிழ் செய்திகளை வெளியிடும் இணையங்கள் சில, வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ள தமிழ் இளைஞர்கள் காணாமல் போனதாகவும் அவர்களின் சடங்கள் பொலநறுவையில் குளிரூட்டப்பட்ட அறைகளில் உள்ளதாகவும் அவர்களின் சடங்களில் இருந்து உடலுறுப்புக்கள் வெட்டி எடுக்கப்பட்டதாகவும் அதை ஒரு பாதிரியார் கண்டு புகைப்படம் எடுத்ததாகவும் படங்களோடு செய்திகளை வெளியிட்டு புலம்பெயர்ந்த தமிழர் மத்தியில் மிகுந்த பரபரப்பை உருவாக்கியிருந்தன. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

புலிகளின் பாரிய தற்கொலைப் படகை படையினர் கைப்பற்றினர்

May 13th, 2009 admin Posted in TELOnews No Comments »

இராணுவத்தின் 53வது படையணியினர் கரையாமுள்ளி வாய்க்கால் பகுதியில் தற்கொலைத் தாக்குதலுக்கு புலிகள் தயார்நிலையில் வைத்திருந்த 1500கிலோ சி-4 ரக வெடிபொருள் கொண்ட 55அடி நீளமான படகு ஒன்றை இன்று (மே. 13) காலை கைப்பற்றியுள்ளனர்.

AddThis Social Bookmark Button

59வது படையணி வட்டுவாகல் பாலத்தை மீட்டுள்ளது

May 12th, 2009 admin Posted in TELOnews No Comments »

  பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலைமையில் 59வது படையணி இன்று (மே. 12) காலை முல்லைத்தீவு நகருக்கு வடக்கே உள்ள வட்டுவாகல் பகுதியையும் வெள்ளமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தையும் இணைக்கும் வட்டுவாகல் பாலத்தை விடுவித்துள்ளனர். இந்தப் பாலம் மீட்கப்பட்டதை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒர் இராணுவ நடவடிக்கையென படைத்துறை வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். வன்னி மனிதாபிமான நடவடிக்கை அதன் இறுதி நாட்களை நெருங்க உள்ளதை உறுதியுடன் தாம் சொல்லமுடியுமென மேலும் தெரிவித்து உள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சுவிஸில் ரெலோ தலைவர் சிறீ சபாரட்னம் மற்றும் ரெலோ போராளிகளின் 23வது நினைவஞ்சலி நிகழ்வு

May 11th, 2009 admin Posted in TELOnews No Comments »

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் – ரெலோ வின் தலைவர் சிறீ சபாரட்னம் மற்றும் ரெலோ போராளிகளின் 23வது நினைவஞ்சலி கடந்த 9.5.2009 அன்று சுவிஸில் உணர்வு பூர்வமாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சுவிஸ், பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா போன்ற நாடுகளில் இருந்து ரெலோவின் ஆரம்பகால உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர். ஆரம்ப கால நினைவுகளுடன் எம்மை விட்டு மறைந்த சிறீ அண்ணா மற்றும் தோழர்களும் நினைவு கூரப்பட்டனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அமரர் சிறீ சபாரட்னம் அவர்களுக்கு திருகோணமலையில் அஞ்சலி நிகழ்வு

May 11th, 2009 admin Posted in TELOnews No Comments »

தமிழ் மக்களின் விடிவுக்காகவும் அரசியல் உரிமைகளுக்காகவும் அயராது உழைத்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரட்னம் அவர்களின் உயிரை பாசிப் புலிகளின் அதிகார வெறி பலிகொண்ட 23 வது ஆண்டு நினைவு தினத்தில் திருகோணமலை மாவட்ட சிறீ ரெலோ அரசியல் காரியாலய உறுப்பினர்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தி உள்ளனர். இந்நிகழ்வுக்கு வருகை தந்து பொதுசார் அமைப்பு பிரதிநிதிகள், கிராம சங்கத் தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோர் ஒன்று சேர்ந்து இவ் அஞ்சலி நிகழ்வை சிறப்பித்தனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

குழந்தைகளையும் பெண்களையும் முன்னிறுத்தி நெடுஞ்சாலையை முடக்குவது அபாயகரமானது; சட்டவிரோதமானது : ரொறொன்ரோ பொலிஸ்

May 11th, 2009 admin Posted in TELOnews No Comments »

குழந்தைகளையும் பெண்களையும் முன்னிறுத்தி நெடுஞ்சாலையை முடக்குவது அபாயகரமானது; சட்டவிரோதமானது என ரொறொன்ரோ பொலிஸ் தலைமையர் பில் பிளையர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான புலிகளின் ஆதரவாளர்கள் ரொறன்ரோவில் உள்ள ஸ்பாடினா அவெனியு கார்டினர் நெடுஞ்சாலையை நேற்று (மே. 10) ஞாயிற்றுக்கிழமை இரவு 7:00 மணியளவில் முடக்கியுள்ளனர். மாலைநேரம் வழமையான நெரிசல் மிக்க கார்டினர் நெடு ஞ்சாலையின் போக்குவரத்தை இந்த ஆர்ப்பாட்டம் முற்றாக முடக்கி விட்டது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ் அலை உறவுப்பாலம் நிகழ்ச்சியை சிறீ ரெலோ தலைவர் உதயன் அவர்களும் தேசிய அமைப்பாளர் அபூயூசூப் அவர்களும் சிறப்பிக்கிறார்கள்

May 8th, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

 கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் டான் தமிழ் ஒலி வானொலியில் பிரதி சனிக்கிழமை தோறும் இடம்பெறும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில்  09.05.2009  அன்று ஐரோப்பிய நேரம் இரவு 10 மணிக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் – சிறீ ரெலோவின்  தலைவர் உதயன் அவர்களும் சிறீ ரெலோவின் தேசிய அமைப்பாளர் அபூயூசூப் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இலங்கை இராணும் இறுதியில் ஏமாற்றத்தை சந்திக்கும் : நடேசன் சூசகம்

May 8th, 2009 admin Posted in TELOnews No Comments »

ஐரோப்பாவில் கேட்கக்கூடிய செய்மதித் தமிழ் வானொலியில் நேற்று (மே. 7) தொலைபேசி ஊடாக கேட்கப்பட்ட கேள்வி யொன்றுக்கு பதில் அளிக்கும் போது புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் `இலங்கை இராணும் இறுதியில் ஏமாற்றத்தை சந்திக்கும்` என்றார். வெள்ளமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தில் யுத்த நடவடிக்கைகளற்ற வலயத்தில் பொது மக்களை மனிதகேடயங்களாகப் பயன்படுத்தி அங்குள்ள மிகப் பாதுகாப்பான பதுங்கு குழிகளில் மறைந்திருக்கும் புலிகள் இயக்க மேல்மட்டத் தலைவர்கள் அங்கிருந்து தப்பிப்போக முடியாத வகையில் அப்பகுதியின் கடற்பரப்பு உட்பட தரை மார்க்கமாக ஐந்து முனைகளில் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு திடமான தகவல் வெளியிடும் நிலையில், நடேசனின் சூசகமான இக்கூற்று சற்று கவனம் செலுத்தப்பட வேண்டியது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

கல்லறையும் கருக்கொள்ளும் : வீழ்ந்த இடத்தில் எழுந்தவர்

May 7th, 2009 admin Posted in TELOnews No Comments »

இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன் எமது தலைவர் புலிகளால் எங்கு வீழ்த்தப்பட்டாரோ அதே இடத்தில் இந்த வருடம் சிறீ-ரெலோ இயக்கத் தோழர்களால் சிறீ அண்ணாவின் நினைவேந்தும் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. கோண்டாவில் பகுதியில் உள்ள மூன்று கோவிலடி – அன்னங்கை எனும் இடத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சு. சிறீ சபாரட்னம் அவர்களின் 23வது நினைவேந்தும் நிகழ்வு நேற்று (மே. 6) சிறீ-ரெலோவின் யாழ் மாவட்ட பொறுப்பாளர் சங்கிலியன் தலைமையில் நிகழ்ந்துள்ளது. இந்நிகழ்வில் ஈபிடிபியின் யாழ் மாவட்ட முக்கியஸ்தர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர். அமரர் சிறீ சபாரட்னம் அவர்களின் உருவப்படம் வைக்கப்பட்டு நினைவு தீபங்கள் ஏற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியின் சில காட்சிகளை கீழே காணலாம். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

புலிகளின் கடைசி மண் அணையும் தகர்ந்தது

May 7th, 2009 admin Posted in TELOnews No Comments »

பொதுமக்கள் பாதுகாப்புக்குக்கென அரசு நிர்ணயம் செய்த யுத்த சூனிய பிரதேசத்தை புலிகள் தமது கடைசி பதுங்கும் இடமாக்கி யுள்ளனர். யுத்த தவிர்ப்பு வலயத்தை புலிகள் மோதல் பிரதேசமாக்கியுள்ளதோடு ஆயிரக்கணக்கான மக்களை மனித கேடமாக்கி யுள்ளனர். வன்னி மனிதாபிமான நடவடிக்கையையின் இறுதி கட்டமாக படையினர் நேற்று (மே. 6) புலிகளின் கடைசி மண் அணை ஒன்றை அழித்து வெள்ளமுள்ளி வாய்க்கால் நோக்கி மேலும் முன்னேறியுள்ளனர்.

AddThis Social Bookmark Button

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளருமாம்

May 6th, 2009 admin Posted in TELOnews No Comments »


ஊரான் வீட்டு பிள்ளையின் கையில் நச்சுக் குப்பி கொடுக்கும் ‘அதி மேதகு தேசிய தலைவர்’ சொந்தப் பிள்ளையின் கையில் வெள்ளிக்கத்தி கொடுத்து மகன் பிறந்தநாள் `குதப்பி` வெட்டும் அழகைக் கண்டு களிக்கும் பரவச நிலையில் மனைவியுடன் காட்சியளிக்கிறார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

நினைவில் பதிந்த சுவடுகள்

May 6th, 2009 admin Posted in TELOnews No Comments »

தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தனது முதலாவது தலை முறைத் தலைமைகளை தெற்கின் இன வெறிக்கு இரை கொடுத்தது. ரெலோ தனது இரண்டாவது தலை முறைத் தலைமையையும் நூற்றுக்கணக்கான போராளிகளையும் வடக்கின் பயங்கரவாதத்திற்கு காவு கொடுத்தது. இன்று, எமது மனங்களில் என்றும் அழியாத சிறீயண்ணாவையும் மற்றும் போராளிகளையும் புலிகளின் பாசிச அரசியலில் முதற்காலடி நர வேட்டை ஆடிய இருபத்தி மூன்றாம் வருட நினைவேந்தும் நாள். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பிரபாகரன் இன்னும் முல்லைத்தீவிலேயே இருக்கின்றார்:பிரதமர்

May 5th, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினரால் விடு விக்கப்படாமல் எஞ்சியுள்ள சுமார் நான்கு சதுரகிலோமீட்டர் பரப்பளவில் தங்கியிருப்பதாக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வெள்ளமுள்ளி வாய்க்கால் பகுதியில் படையினர் இறுதி நடவடிக்கை.

May 5th, 2009 admin Posted in TELOnews No Comments »

அரசினால் பொது மக்களின் பாதுகாப்புக்கென அறிவிக்கப்பட்ட `யுத்த சூனிய வலயம்` புலிகளால் `மோதல் பிரதேசம்` ஆக மாற்றப்பட்டு ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் மனித கேடயமாக்கப்பட்டுள்ளனர். புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொது மக்களை மீட்டும் `வன்னி மனிதாபிமான நடவடிக்கை` இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு இன்று (மே. 5) அறிவித்துள்ளது. வெள்ளமுள்ளி வாய்க்கால் பகுதியில் பிரபாகரன் உட்பட எஞ்சியுள்ள புலிகளின் தலைவர்கள் 4.5 சதுர கிலோ மீட்டரைவிட குறைவான மிகச்சிறிய நிலப்பரப்பினுள் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button