சிறீ-ரெலோ கப்பம் வாங்குவதாக பொய்யான செய்தி வெளியிடப்பட்டது ஏன்?

March 4th, 2009 admin Posted in TELOnews No Comments »

வவுனியா குருமண்காட்டு பகுதியில் உள்ள சிறீ-ரெலோ காரியாலயத்தில் இருந்த வின்சன், கொன்சன் மற்றும் குணா என்பவர்களை வவுனியா பொலிசார் இன்று (மார்ச். 04) காலை  விசாரணை செய்துள்ளனர். வவுனியா தோணிக்கல் பகுதியை சேர்ந்த கந்தசாமி கதிரேசன் என்பவரின் மகளுக்கு சொந்தமான வான் ஒன்றை இருசாராரும் கையெழுத்திட்ட ஒப்பந்த மூலம் வாடகைக்கு பெற்று சிறீ-ரெலோ பாவித்து வந்துள்ளனர். அதற்குரிய மாத வாடகையை கடந்த இரு மாதங்களாக உரிய நேரத்தில் செலுத்தியும் உள்ளனர். இந்த வாகன ஒப்பந்தம் குறித்த விசாரணைக்காக அவர்களை வவுனியா பொலிசார் அழைத்துச் சென்றனரே அன்றி, நெருப்பு இணையம் வெளியிட்ட செய்தியான  ‘35 இலட்சம் ரூபா கப்பம் வாங்க முற்பட்டபோது பொலிஸாரால் கைது’ என்பது அப்பட்டமான பொய்யாகும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பிளவுபடும் புலிகளின் தலைமைகள்

March 4th, 2009 admin Posted in TELOnews No Comments »

புதுகுடியிருப்பு வீழ்ச்சிக்குப் பின் புலிகளின் மேல்மட்ட இராணுவத் தலைமைகள் தமக்குள் தீவிரமாக முரண்படுவதாக களமுனைச் செய்திகள் தெரிவிக்கிறன. புதுகுடியிருப்பில் நிலைகொண்டிருந்த சொர்ணம், பானு, ஆதித்தியன், சித்திராங்கன் தலைமையிலான குழுக்கள் அண்மையில் இராணுவத்திடம் ஏற்பட்ட தோல்வியால் ஏற்பட்ட பிரதேச இழப்புக்கு ஆளையாள் மாறி குற்றஞ்சாட்டி வருவதாக அவர்களில் தொடர்பாடல்களை ஒட்டுக்கேட்ட இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஓய்ந்து போன புலிகளின் குரல் !

March 2nd, 2009 admin Posted in TELOnews No Comments »

கடந்த ஐந்து நாட்களாக புலிகளின் குரல் வானொலி தனது வழமையான பண்பலை(FM)  ஒலிபரப்புகளை செய்ய முடியாது போய்யுள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்னியில் இருந்து பண்பலையூடாக ஒலிபரப்பாகும் புலிகளின் குரல் வானொலியின் செய்திகளை வழமையாக அதன் இணையத்தளத்தில் அன்றன்றே தரவேற்றி பதிவு செய்து வருவார்கள். கடந்து மாதம் பெப்ரவரி 25ம் திகதிக்கு பின் புலிகளின் குரல் இணையத்தளத்தில் செய்திகள் எதுவும் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இதனை புலிகளின் குரல் இணையத்தளத்தில் அவதானிக்கக் கூடியாதாக உள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ்அலை உறவுப்பாலம் நிகழ்ச்சியில் ஈரோஸ் அமைப்பின் தலைவர் ஆர்.பிரபாகரன் அவர்கள் கலந்துகொள்கிறார்

February 27th, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் டான் தமிழ்ஒலி வானொலியில் பிரதி சனிக்கிழமை தோறும் இடம்பெறும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில் எதிர்வரும் சனிக்கிழமை 28.02.2009 ஐரோப்பிய நேரம் இரவு 10 மணிக்கு ஈரோஸ் அமைப்பின் தலைவர் ஆர்.பிரபாகரன்  அவர்கள் கலந்துகொள்கிறார்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 0033 1 48 35 32 00. டான் தமிழ்ஒலி வானொலியை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ரிஆர்ரி தமிழ்அலை வானொலியூடாக கேட்கலாம். ஹொட்பேர்ட் சட்டலைற்றில் ஒலிபரப்பாகும் இந்த வானொலியை, www.trttamilalai.com என்ற இணையத்தளம் ஊடாகவும் கேட்கலாம்.

AddThis Social Bookmark Button

தமிழ்நெற் வெளியிட்டது பொய்யான தகவல் : விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார

February 27th, 2009 admin Posted in TELOnews No Comments »

இலங்கை விமானப் படையினரின் எந்த விமானங்களும் இன்று  புலிகளின் தாக்குதலிற்கு இலக்காகவில்லை என விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கை விமானபடையினருக்கு சொந்தமான மிகையொலி யுத்தவிமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் இன்றுகாலை 11.25 மணியளவில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நெற்றில் வெளியான செய்தியையடுத்து, விமானப்படைப் பேச்சாளரை வீரகேசரி தொடர்பு கொண்டு கேட்ட போது, `அவ்வாறு எவ்விதமான சம்பவங்களும் இடம்பெறவில்லை. அத்துடன் விமானப்படையினர் இன்று (பெப். 27) வான் தாக்குதல்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை. இது பொய்யான தகவல்` என அவர் தெரிவித்துள்ளதாக வீரகேசரி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

அமெரிக்க செனட் சபையில் இலங்கை நிலவரம்

February 25th, 2009 admin Posted in TELOnews No Comments »

அமெரிக்காவின் அதிகாரம் வாய்ந்த செனட் சபையின் வெளிவிவகார குழு முன்னிலையில் நேற்று இலங்கை நிலவரம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது, இலங்கையில் முன்னர் அமெரிக்க தூதுவராகக் கடமையாற்றிய ஜெவ்றி லன்ஸ்ரெட், மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த அன்னா நைஸ்ராட், சி.பி.ஜே எனும் பத்திரைகையாளரைப் பாதுகாக்கும் அமைப்பின் ஆசிய பிரிவுத் தலைவர் பொப் டீற்ஸ் ஆகிய மூவரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. கீழுள்ள இணைப்பின் அதை பார்க்கலாம். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சிறுவர்களை கரும்புலிகளாக்கும் புலிகளின் இறுதி யுத்தம்

February 21st, 2009 admin Posted in TELOnews No Comments »

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வள்ளிபுனத்தில் முன்நகர்ந்த அரச படையினர் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.02.09) மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த நெடுஞ்செழியன் என்ற ’குழந்தைப் போராளி’ கரும்புலியாக அனுப்பப்பட்டுள்ளார். அவரது உறுவினர்கள் தெரிவித்த தகவலின்படி நெடுஞ்செழியன் இன்னும் பதினெட்டு வயதை பூர்த்தி செய்யாதவர் என்பது தெரிய வந்துள்ளது.

AddThis Social Bookmark Button

பிரான்ஸில் நடைபெற்ற இந்திய தூதரகத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது தமிழர் சிலர் கைது.

February 17th, 2009 admin Posted in TELOnews No Comments »

இன்று (பெப். 17) பிரான்ஸில் இந்திய தூதரகத்தின் முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழர்கள் சிலர் பிரான்ஸ் காவற்துறையால் கைது செய்யப்பட்டதாக
தெரிய வருகிறது. இந்திய தூதரகத்தின் முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது இந்திய தூதரகத்தின் இரண்டு மோட்டார் வண்டிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழர் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட புலி ஆதரவு முகவர் அமைப்பைச் சேர்ந்த பதினைந்துக்கு மேற்பட்டவர்கள் இதுவரை பிணை மறுக்கப்பட்டு தொடர்ந்து தடுப்புக்காவல் சிறையில் வைக்கப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

AddThis Social Bookmark Button

வன்னியில் அவதிப்படும் மக்களைக் காப்பாற்ற வலியுறுத்தி கொழும்பில் உண்ணாவிரதம்

February 7th, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

வன்னியில் யுத்தப் பேரழிவுகளில் சிக்குண்டு உணவு,உறைவிடமின்றி உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் அப்பாவி பொது மக்களை காப்பாற்ற அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டுமென்று கோரி தலைநகர் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப்போராட்டமொன்று நடைப்பெற்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மன்னாரில் பொதுமக்களும் சிறீ-ரெலோ அமைப்பினரும் இணைந்து புலிகளுக்கெதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்

February 3rd, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

மன்னாரில் பொதுமக்களும் சிறீ-ரெலோ அமைப்பினரும் இணைந்து புலிகளுக்கெதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இவ்வார்ப்பாட்டத்தில் 2000-2500 க்கு மேற்பட்ட மக்கள் பங்குகொண்டு வன்னியில் புலிகள் மனிதகேடயங்களாக தடுத்து வைத்துள்ள மக்களை விடுவிக்க வேண்டும் என கோசம் எழுப்பினர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மன்னார் வைத்தியசாலையில் சிறீ-ரெலோ அமைப்பினர் இரத்ததானம்

February 3rd, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

வன்னியில் இடம்பெறும் யுத்தத்தில் காயமடைந்து வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மேலதிக சிகிச்சைக்கு இரத்தத்தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் சிறீரெலோ அமைப்பினர் நேற்று மன்னார் வைத்தியசாலையில் அம்மக்களுக்காக இரத்த தானம் செய்துள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

Mannar People Take to Streets Burning Prabhakaran’s Effigy

February 3rd, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

MANNAR: AN estimated crowd of about 2000-2500 peace loving people in MANNAR took to the streets during Tuesday (3) mid-noon and protested against LTTE’s continuing harassment against their kith and kin trapped in the WANNI. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ் அலை உறவுப்பாலம் நிகழ்ச்சியில் சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(SRI-TELO) செயலாளர் நாயகம் பரராஜசிங்கம் உதயராசா (உதயன்) கலந்துகொள்கின்றார்.

January 17th, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் டான் தமிழ்ஒலி வானொலியில் பிரதி சனிக்கிழமை தோறும் இடம்பெறும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில் எதிர்வரும் சனிக்கிழமை 17.01.2009 ஐரோப்பிய நேரம் இரவு 10 மணிக்கு சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (SRI-TELO) செயலாளர் நாயகம் பரராஜசிங்கம் உதயராசா (உதயன்) அவர்கள் கலந்துகொள்கிறார்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கம்: 00 33 1 48 35 32 00. டான் தமிழ் ஒலி வானொலியை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் TRT தமிழ் அலை வானொலியூடாக கேட்கலாம். HOTBIRD சட்டலைற்றில் ஒலிபரப்பாகும் இந்த வானொலியை  www.trttamilalai.com என்ற இணையத்தளம் ஊடாகவும் கேட்கலாம்.

AddThis Social Bookmark Button

ரெலோ நியூஸ் வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

January 14th, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

 

 

 

 

 

 

 

 

 

ரெலோ நியூஸ் வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

AddThis Social Bookmark Button

சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் திருகோணமலை மாவட்டத்திலுள்ள வறுமைப்பட்ட மாணவர்களுக்கு இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்கியது

January 3rd, 2009 admin Posted in TELOnews No Comments »

சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட காரியாலயத்தில் 2ம் திகதி வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிராம அபிவிருத்தி சபைகளின் ஒத்துழைப்புடன் திருகோணமலைப் பிரதேசங்களிலிருந்து வறுமையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டஆகக்குறைந்தது ஐந்து குடும்பங்களை சேர்ந்த எல்லா மாணவர்களுக்கும் பாடசாலை அப்பியாசக்கொப்பிகள் இலவசமாக வழங்கும் வைபவம் சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் திருகோணமலை மாவட்டக் காரியாலய சிறீ ரெலொ உறுப்பினர்களால் ஓழுங்கு செய்யப்பட்டது.

Read the rest of this entry »

AddThis Social Bookmark Button