நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஜனாதிபதி தெரிவித்து என்ன?

நாட்டின் பொருளாதார வளர்ச்சி சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் பாதுகாக்கும் வகையில் இடம்பெற வேண் டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித் துள்ளார்.

பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் சீரான வளர்ச்சியைக் கொண்டுவருவதே தனது நோக்கம் என்று கூறி கணிசமான திட்டங்களைச் சமர்ப்பிக்குமாறு ஜனா திபதி கோத்தாபய ராஜபக்ஷ தனியார் துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் தனியார்த் துறை தொழில் முயற்சியாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த கோரிக் கையை விடுத்தார்.

கொவிட்- 19 கொரோனா தொற்று பரவல் காரணமாக முடங் கியிருக்கும் பொருளாதாரத்திற்குப் புத்துயிரளித்து நீண்டகால பொருளாதார வளர்ச்சியை அடைவதை நோக் கமாகக் கொண்டு தனியார் தொழில் முயற்சியாளர் களைக் குழுக்களாகச் சந்திக்க ஜனாதிபதி தீர் மானித் துள்ளார்.

தங்கள் வியாபார துறைகளின் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளித்த அவர்கள், தற் போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் விவரித்தனர். பயிற்றப்பட்ட மனிதவளத்தின் பற்றாக் குறை, நிறுவன திறமையின்மை, கட்டுமானப் பொருட் களின் பற்றாக்குறை, சில தொழிலாளர்களின் அலட்சியம் மற்றும் புதிய சந்தைகளைக் கண்டுபிடிப்பதில் சிரமம் என அவர்கள் தெரிவித்தனர்.

இந்த பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து விரைவில் தீர்வுகளை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply