ட்ரம்பின் சீனப் பயணம் ஒரு மாதம் தாமதம்

ஈரான் போர் காரணமாக, மார்ச் மாத இறுதியில் சீனாவுக்கு மேற்கொள்ளவிருந்த முக்கியத்துவமிக்க பயணத்தை சுமார் ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் அதனை ஒரு மாதம் அல்லது அதற்கு மேலாக ஒத்திவைக்குமாறு கோரியுள்ளோம்,” என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறிய அவர், போரை மேற்பார்வையிடுவதற்கு தான் அங்கிருப்பது முக்கியம் என்றும் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நேருக்கு நேர் சந்தித்துப் பேசியதையடுத்து, ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பு மார்ச் 31 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெறவிருந்தது.

இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடுகள், தீர்வைகள் மற்றும் பொருளாதாரத் தடைகள் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்கா மற்றும் சீனாவின் பிரதிநிதிகள் கடந்த சில நாட்களாக பாரிஸில் சந்தித்துப் பேசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply