அமித்ஷா அவசர ஆலோசனை: டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு

டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் நேற்று நடத்திய டிராக்டர் பேரணியில் மோதல் வெடித்தது. வன்முறைகள் அரங்கேறின. போராட்டக்காரர்களை தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்தியும் போலீசார் விரட்டியடித்தனர்.இதனால் தலைநகரில் பதற்றமான சூழல் உருவானது. டெல்லியில் சில இடங்களில் இணையதள சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லாவை டெல்லி போலீஸ் உயர் அதிகாரிகள் சந்தித்து விளக்கினார்கள். அதைத்தொடர்ந்து உயர் அதிகாரிகளை தனது இல்லத்துக்கு அழைத்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார். டெல்லி பாதுகாப்பு நிலவரத்தை அவர் ஆய்வும் செய்தார்.
இந்த உயர்மட்ட கூட்டத்தில் உள்துறை செயலாளர் அஜய் பல்லா, டெல்லி போலீஸ் கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா மற்றும் உயர்அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

டெல்லியில் நடந்த மோதல் குறித்தும், வன்செயல்கள் குறித்தும் அமித்ஷாவிடம் அதிகாரிகள் எடுத்துக்கூறினார்கள். இதையடுத்து தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துணை ராணுவ படையினர் அதிக அளவில் டெல்லியில் முக்கிய பகுதிகளில் நிறுத்தப்பட உள்ளனர்.

ஜனாதிபதி மாளிகை, பாராளுமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும், விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply