இலங்கையில் முதலாவது கொரோனா தொற்றாளர் பதிவாகி ஒருவருடம்

இந்த நாட்டில் முதலாவது கொவிட் 19 தொற்றாளர் அடையாளம் காணப்பட்டு இன்றுடன் ஒரு வருடமாகிறது. இந்த நாட்டில் முதலாவது தொற்றாளர் பதிவாகியது கடந்த வருடம் ஜனவரி மாதம் 27ம் திகதியாகும்.

முதலாவது நோயாளராக லியூ யேங் எனும் சீன பெண்ணே அடையாளம் காணப்பட்டார். அவர் இலங்கைக்கு வருகை தந்த பின்னர் கொரோனா தொற்றின் அறிகுறிகள் தென்பட்டமையினால் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

அதிலிருந்து ஒருவருட காலமான இன்று வரை நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை அறுபதாயிரத்தை அண்மிக்கவுள்ளது. நேற்றிரவு நிலவரப்படி, இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 59,922. இதேவேளை இலங்கையில் இதுவரை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply