இங்கிலாந்தை விடாத கொரோனா : 40 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு
இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும் உருமாறிய கொரோனா வைரஸ், அந்நாட்டுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரிட்டன் தற்போது 5-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 13,494 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். அங்கு கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 39,98,655 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பால் 678 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 529 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 20.56 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply