7 வருட பிரஜா உரிமையை இழக்கும் மைத்திரி? ஞானா அக்காவிடம் ஆலோசனை பெற்றார்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரஜா உரிமையை 7 வருடங்களுக்கு பறிக்க வேண்டும் என ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதாக அண்மையில் பத்திரிகை ஒன்றில் செய்தி வௌியானது.
இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்ள செய்ய வேண்டியது சிரேஸ்ட சட்டத்தரணிகளிடம் சென்று ஆலோாசனை பெறுவதாகும்.
ஆனால் மைத்திரிபால சிறிசேன இது விடயம் குறித்து ஆலோசனை பெற அநுராதபுரம் ஞானா அக்காவிடம் சென்றுள்ளார்.
நேற்று காலை தொடக்கம் பகல் 12.30 வரை மைத்திரிபால சிறிசேன ஞானா அக்காவின் தேவாலயத்தில் இருந்துள்ளார்.
தலதா மாளிகை தியவடன நிலமெ நிலங்க தெலே மற்றும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன ஆகியோரும் இங்கு இருந்துள்ளனர்.
எமக்கு தெரிந்த வரையில் பிரபுக்கள் அதிகம் செல்லும், தீர்மானம் அதிகம் எடுக்க ஆலோசனை பெறப்படும் இடமாக ஞானா அக்காவின் தேவாலயம் மாறியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply