க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மூவர் கைது : அஜித்ரோஹண
கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையில் பரீட்சார்த்திகளுக்கு பதிலாக இதுவரை பரீட்சைக்குத் தோற்றிய மூவர் பொலிஸாரால் கைது செய்யப் பட்டுள்ளனர்.
தனது உறவினர் ஒருவருக்காகக் கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை யில் கணித பரீட்சைக்காகத் தோற்றவிருந்த 21 வயது இளைஞன் ஒருவர் அனுராதபுரம் – ஹிதொகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேக நபர் திஸ்ஸமகாராம வீரவில பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
அத்துடன் குறித்த சந்தேக நபர் இன்றைய தினம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையில் பரீட்சார்த்திகளுக்கு பதிலாக இதுவரை பரீட்சைக்குத் தோற்றிய மூவர் பொலிஸாரால் கைது செய்யப் பட்டுள்ளதாக அஜித் ரோகண மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply