நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் இணையத்தளம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.

நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கொவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் வைத்திய கலாநிதி சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளேயின் அழைப்பின் பேரில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் இந்த இணையத்தளம் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் அனைத்து அங்கத்தவர்களும் கலந்துகொள்ளும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இலங்கையில் பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமை மீறல்களை கண்டறிந்து பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்யக்கூடிய பரிந்துரைகளை வழங்குவதற்கு நாடாளுமன்ற விசேட குழுவொன்றை அமைக்குமாறு இந்த ஒன்றியத்தினால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை ஒன்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளேயினால் சபையில் முன்வைக்கப்படும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply