ஹர்சன ராஜகருணாவின் செல்பியால் மீண்டும் சிக்கலில் ரஞ்சன்

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணாவின் செயற்பாட்டினால் சிறையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவிற்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்குனுகொலபெலஸ்ஸ சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை சந்திக்கச் சென்ற ஹர்சன ராஜகருணா ரஞ்சனுடன் புகைப்படம் எடுத்து அதனை முகநூலில் வௌியிட்டுள்ளார்.
இதனையடுத்து சிறை அதிகாரி ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
சிறைக்கு உள்ளே தொலைபேசி கொண்டு செல்ல அனுமதி இல்லை. ஆனால் ஹர்சன ராஜகருணா தொலைபேசி கொண்டுசென்று ரஞ்சனுடன் செல்பி எடுத்துள்ளார்.
இந்நிலையில் இதுவிடயம் தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
ஹர்சன வௌியில் உள்ளார். அவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் வரப்பிரசாதம் உள்ளது. ஆனால் ரஞ்சன் தற்போது சிக்கலில் மாட்டியுள்ளார்.
இதனால் ஹர்சன போன்ற நண்பர்களை விட நிமல் லன்சா போன்ற எதிரிகள் ரஞ்சனுக்கு உகந்தவர்கள் என்ற கதை வௌியில் பேசப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply