அமெரிக்காவில் ஆளுக்கு ரூ.1 லட்சம் கொரோனா நிதி: மசோதாவில் கையெழுத்திட்டார் ஜோ பைடன்

சீனாவில் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று, உலக நாடுகளிலேயே மிக மோசமாக தாக்கி இருப்பது, அமெரிக்க வல்லரசு நாட்டைத்தான்.அங்குள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மைய புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் இதுவரை 2 கோடியே 91 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை இந்த கொடிய வைரஸ் தாக்கி உள்ளது.
அத்துடன் 5 லட்சத்து 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரசின் பிடியில் இருந்து மீள ஒரு வழியின்றி மரணம் அடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் ஊரடங்கு, பொதுமுடக்கத்தால் பொருளாதாரமும், வர்த்தகமும் பெரும்பாதிப்புக்கு உள்ளாகின. லட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர். நிறுவனங்கள் மூடப்பட்டன.
இந்த நிலையில் அங்கு இப்போது ஆட்சி மாற்றம் நடந்து ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் அதிகாரத்துக்கு வந்துள்ளது.
இந்த தருணத்தில் அங்கு கொரோனா தாக்கத்தை சமாளிப்பதற்காக 1.4 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.102 லட்சம் கோடி) மதிப்பிலான நிவாரண மசோதா, நாடாளுமன்ற செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. அங்கு இந்த மசோதா நிறைவேறி விட்டது.
அதையடுத்து அந்த மசோதா பிரதிநிதித்துவ சபையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 1.9 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கொரோனா நிவாரண மசோதாவில் கையெழுத்திட்டார், இது திட்டமிட்டதை விட ஒரு நாள் முன்னதாக கையெழுத்திட்டுள்ளார்.
இந்த நிதி மசோதா, அமெரிக்க மக்கள் பெரும்பாலோருக்கு தலா 1,400 டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 2 ஆயிரம்) கொரோனா நிதி நேரடியாக கிடைக்க வழி செய்துள்ளது.
மேலும் வேலையை இழந்தவர்கள் செப்டம்பர் மாதம் வரையில் மாதம் 300 டாலர் (சுமார் ரூ.22 ஆயிரம்) நிதி உதவி பெறவும் வழி வகுத்துள்ளது.
மேலும், அமெரிக்க மாகாண மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 350 பில்லியன் டாலர், பள்ளிகளை திறப்பதற்காக 130 பில்லியன் டாலர், கொரோனா பரிசோதனை, ஆராய்ச்சி விரிவாக்கத்துக்கு 49 பில்லியன் டாலர், தடுப்பூசி வினியோகத்துக்கு 14 பில்லியன் டாலர் (1 பில்லியன் என்பது 100 கோடி ஆகும்) வழங்கவும் உதவி உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply