இலங்கையில் நேற்றைய தினம் 253 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம்

இலங்கையில் நேற்றைய (24) தினம் அடையாளம் காணப்பட்ட 253 கொவிட் வைரஸ் தொற்றாளர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என Covid-19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கம்பா மாவட்டத்திலிருந்து 42 பேர், களுத்துறை மாவட்டத்திலிருந்து 2 பேர், நுவரெலியா மாவட்டத்திலிருந்து ஒருவர், இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 13 பேர், காலி மாவட்டத்திலிருந்து 18 மற்றும் குருநாகல் மாவட்டத்திலிருந்து 12 பேரும் நேற்றைய (24) தினம் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களாக பதிவாகியுள்ளனர்.

மேலும் அம்பாறை மாவட்டத்திலிருந்து 10 பேர், மொனராகலை மாவட்டத்திலிருந்து மூன்று பேர், திருகோணமலை மாவட்டத்திலிருந்து ஒருவர், அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து 16 பேர் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 4 பேரும் நேற்றையதினம் (24) அடையாளம் காணப்பட்டவர்களுள் அடங்குவர்.

அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 38 பேரும், பதுளை மாவட்டத்திலிருந்து 22 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 3 பேர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த 15 பேரும் இவ்வாறு நேற்றைய (24) தினம் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply