பிரேசிலை துரத்தும் கொரோனா : 3 லட்சத்தை கடந்தது பலி எண்ணிக்கை
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன.பிரேசில் நாட்டில் கடந்த இரு வாரங்களாக கொரோனா தொற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பிரேசிலில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது.அங்கு கொரோனாவுக்கு 3,01,087 பேர் பலியாகி உள்ளனர்.
மேலும், அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அங்கு ஒரு கோடியே 22 லட்சத்து 27 ஆயிரத்து 179 ஆக உயர்ந்துள்ளது.
பிரேசிலில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 1.06 கோடி பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 12.36 லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply