13 வது திருத்தத்தை உள்ளவாறே நடைமுறைப்படுத்த வேண்டும் : சஜித் பிரேமதாஸ

இனிவரும் ஜெனீவா அமர்வில், இலங்கைக்கு எதிராகத் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டால், அவை நிறைவேற்றப்படாமல் முறியடிப்பதற்குத் தாமும் ஒத்துழைப்பு வழங்குவோம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசியலமைப்பின் 13வது திருத்தத்துக்கு மைனஸ் காட்டுபவர்கள், சர்வதேசத்திடம் 13 ப்ளஸ் எனக் கூறுகின்றனர் என்றும் 13வது திருத்தத்தை உள்ளவாறே நடைமுறைப்படுத்தி, ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் கூறினார்.

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் மீதான ஒத்திவைப்புவேளை விவாதம், நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு, 22 நாடுகள் ஆதரவாகவும் 11 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளதுடன், 14 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகிக்கொண்டுள்ள நிலையில், எதிராக வாக்களித்த நாடுகளையும் விலகிகொண்ட நாடுகளையும் இணைத்து, மொத்தமாக 25 நாடுகள் இலங்கைக்குச் சார்பாக வாக்களித்துள்ளன என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார் எனவும் இந்தக் கணக்கு சிறுபிள்ளைத்தனமாக உள்ளதெனவும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply