உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்புக் கூறவேண்டிய குற்றவாளிகள் இவர்களே : அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்புக் கூறவேண்டிய குற்றவாளிகள்.ஐக்கிய தேசிய கட்சியினரும் ஐக்கிய மக்கள் சக்தியினருமே என்றும், அந்த இரு தரப்பையும் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கழமை ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னால் அரசியல் பின்புலமொன்று உள்ளது. அரசியல் நோக்கமொன்று உள்ளது. தாக்குதல்களை நடத்தியது யார்? அவர்களின் பின்புலத்தில் யார் யார் இருந்தனர் என்பதை மாத்திரம் ஆய்வுக்கு உட்படுத்துவது போதுமானதல்ல.

சஹ்ரான் இஸ்லாமிய அடிப்படைவாத வன்முறைக் கருத்துகளை உருவாக்கியது உண்மைதான். சர்வதேச தெற்கு நாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கையில் இஸ்லாமிய இராஜ்ஜியமொன்று உருவாக்குவது அவருடைய நோக்கமாக இருந்தது. அது நீண்டகால வேலைத்திட்டமாகும்.

இந்தச் செயற்பாடுகள் ஆரம்பமான காலத்தில் ரணில் விக்கிரமசிங்கதான் பொலிஸிற்கு பொறுப்பாக இருந்தார். ஆனால், ஆணைக்குழுவின் அறிக்கையில் அவரது பெயர் இல்லை. அது தொடர்பில் கவலையடைகிறேன். பொலிஸ் செயற்பாடுகள் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அத்தருணத்தில் நாம் குற்றச்சாட்டுகளையும் சுமத்தியிருந்தோம்” எனவும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply