பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 6.50 லட்சத்தைக் கடந்தது

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 4,767 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 54 ஆயிரத்து 592 ஆக உள்ளது. அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 14,215 ஆக உள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதன்மூலம் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் பாகிஸ்தான் தற்போது 31-வது இடத்தில் உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply