சுதந்திரக் கட்சி தனித்து செயற்பட தீர்மானம்

அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை என்ற ஆதங்கத்தில் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் உள்ளதாகவும், இதன் காரணமாக இம்முறை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனிவழி செல்ல எதிர்பார்த்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த வருட இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் மாகாண சபைத் தேர்தலில் தனித்து களமிறங்கும் திட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளதாக கூறப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணையின் நிறைவில் மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply