இந்தியாவில் காணப்படும் கொரோனா வைரஸ் நிலைமை குறித்து ஜனாதிபதி கரிசனை : இந்திய பிரதமருக்கு கடிதம்
இந்தியாவில் காணப்படும் கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து ஜனாதிபதி கோத்தபாயராஜபக்ச கரிசனை வெளியிட்டுள்ளார். இந்திய பிரதமருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் ஜனாதிபதி இந்தியாவின் கொரோனா வைரஸ் நிலவரம்குறித்த தனது கரிசனையை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கான இந்திய தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.
மனித குலத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகள் இத்தகைய தொற்றுநோய்களை தோற்கடிப்பதில் வெற்றிகண்டுள்ளன எனவும் ஜனாதிபதிதெரிவித்துள்ளார்.
அர்ப்பணிப்பு மிக்க நிபுணர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் உதவியுடன் இந்தியா இந்த நெருக்கடிக்கு தீர்வை காணும் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி தனது கடிதத்தில் இந்தியா வழங்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசிக்காக இலங்கை மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply