உழைக்கும் மக்களின் உன்னதமான தினம்

உழைக்கும் மக்களின் உன்னதமான தினம் மே தினம். மே தினம் தொழிலாளர்களின் உழைப்புக்கு ஒரு அங்கீகார நாளாகும்.உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்டு, உலகின் இயக்கத்திற்கு ஆணிவேராக திகழும் உழைப்பாளிகள், தங்கள் உரிமைகளை வென்றெடுத்த திருநாள் இந்த மே தினம். உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்தும் உண்மையான திருநாள் மே தினம்.
சுயநலனின்றி பொதுநலனுக்காக இரவு, பகல் என கால நேரமோ, மழை, வெயில் என எந்தவித இயற்கை உத்பாதங்களையும் தாண்டி உழைப்பு என்னும் ஒற்றை வார்த்தையை தாரக மந்திரமாக கொண்டு வாழும் தொழிலாளர்களை நன்றியுடன் நினைத்துப் பார்க்கும் நாள் இன்று.
எட்டு மணித்தியால வேலை நேர கோரிக்கையை முன்வைத்து 1886ம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி அமெரிக்காவின் சிக்காகோவில் எதிர்ப்பு நடவடிக்கை நடைபெற்றது.
இதன் போது போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமானார். இதனை முன்னிலைப்படுத்தி தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைக்காக உலகளாவிய ரீதியில் தொழிலாளர் தினம் மே மாதம் 1ம் திகதி கொண்டாடப்படுகிறது.
இருந்த போதிலும் இலங்கையில் ,கொவிட் வைரஸ் நெருக்கடி நிலவுவதால் இவ்வருடம் மே தின பேரணிகளை நடத்த முடியாது என சுகாதாரப் பிரிவு அறிவித்திருக்கிறது.
இந்தத் தீர்மானத்திற்கு இலங்கையில் உள்ள சகல கட்சிகளும் உடன்பட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply