கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜனை தமிழகத்தில் உற்பத்தி செய்ய நடவடிக்கை : முதலமைச்சர் உத்தரவு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

  • கொரோனா மருந்துகளை தமிழகத்திலேயே உருவாக்கலாம்.
  • ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • ஆக்சிஜன் தட்டுப்பாட்டிற்கு தீர்வாக தமிழகத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க வேண்டும்.
  • மருத்துவ உயர்தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், தடுப்பு மருந்துகள் உள்ளிட்டவற்றை தொழில்கூட்டு முயற்சி மூலம் உருவாக்க வேண்டும்.
  • உற்பத்தி நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழில்வளர்ச்சி நிறுவனம் ஆதரவளிக்கும்.
  • குறைந்தபட்சம் ரூ.50 கோடி முதலீடு செய்யும் நிறுவனங்களுடன் டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் செயல்படும்.
  • ஆலைகளை நிறுவ விருப்பமுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வரும் 31ந்தேதிக்குள் விருப்ப கருத்துகள் கோரப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply