தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.உடல்நிலையை கருத்தில் கொண்டே தமிழக சட்டசபை தேர்தலிலும் விஜயகாந்த் போட்டியிடவில்லை. ஆனாலும், பிரசாரத்துக்காக சென்ற அவர் எதுவும் பேசாமல் தொண்டர்களிடம் வாக்கு சேகரித்தார்.

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அதிகாலை 3 மணிக்கு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என தகவல்கள் வெளியாகின.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply