பேருந்து குடைசாய்ந்ததில் பலர் படுகாயம்

இலங்கை போக்குவரத்து சபை பேருந்து கல்லுண்டாய் வீதியில் குடைசாய்ந்ததில் பலர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் காரைநகர் சாலைக்கு சொந்தமான யாழ்ப்பாணம் – காரைநகர் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து இன்று காலை காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையில் இவ்வாறு குடைசாய்ந்துள்ளது.

காரைநகர்- யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தினை முந்திச் செல்ல முற்படுகையில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகே பாய்ந்து குடைசாய்ந்துள்ளது.

தற்பொழுது கல்லுண்டாய் வீதி அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் குறித்த பகுதியில் இன்று காலை மழை பெய்ததன் காரணமாக வழுக்கல் நிலை காணப்பட்டதாகவும் வேகமாக வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாகவும் விபத்தை நேரடியாக பார்த்தோர் தெரிவித்தனர்.

ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த குறித்த பேருந்தின் சாரதி தப்பி ஓடியுள்ளதாகவும், மேலும் குறித்த வீதியில் ஒவ்வொரு நாளும் குறித்த பேரூந்தானது மிகவும் வேகமாகவே பயணிப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply