பழங்குடியின தலைவரின் மனைவி கொரோனாவுக்கு பலி

பழங்குடியின தலைவர் ஊருவரிகே வன்னியலா எத்தன்னின் மனைவி ஊருவரிகே ஹீன்மெணிகா கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று பிற்பகல் அவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் ஹீன்மெணிகா கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். அதேபோல், அவர் நீண்ட காலமாக சிறுநீரக நோயினால் அவதியுற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் 9 பிள்ளைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply