ஆப்கான் எல்லை அருகே தற்கொலைப்படை தாக்குதல்- 4 பாகிஸ்தான் வீரர்கள் பலி

பாகிஸ்தானின் குவெட்டா புறநகர்ப்பகுதியில் துணை ராணுவத்தினரை குறிவைத்து இன்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பைக்கில் வந்த நபர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான். ஆப்கானிஸ்தான் எல்லை அருகே நடைபெற்ற இந்த தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர். 17 வீரர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் 2 பேர் என 19 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
குவெட்டாவில் ஹசாரா இனத்தைச்சேர்ந்த சுமார் 5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்த சமூகத்தினரை குறிவைத்து நீண்ட காலமாக ஐஎஸ் அமைப்பினர் மற்றும் சன்னி போராளி குழுக்கள் தாக்குதல் நடத்துகின்றனர். 2013ல் போராளிக் குழு நடத்திய தொடர் குண்டுவெடிப்பில் 200 ஹசாராக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply