நாடு தற்போது உள்ள நிலைமையில் உள்ளூராட்சித் தேர்தல் நடக்குமா? நடக்காதா?
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நீடிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலின் பின்னர் அதன் பதவி காலம் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிறைவு பெறுகிறது.
அதன்படி பிப்ரவரி மாதத்தில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
எனினும் நாட்டில் காணப்படும் வைரஸ் தொற்று நிலை மற்றும் தேர்தல் முறை மாற்றம் குறித்த முரண்பாடுகள் காரணமாக அரசாங்கம் தேர்தலைப் இதோட தீர்மானித்துள்ளது.
அதன்படி உள்ளூராட்சி சபைகளில் பதவி காலத்தை நீடிப்பதா அல்லது ஆணையாளர்களின் கீழ் உள்ளூராட்சி சபைகளை நிர்வகிப்பது என்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
உள்ளூராட்சி சபைகள் பெரும்பாலானவை ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்டுப்பாட்டில் இருப்பதால் பதவி காலத்தை நீட்டித்து கொள்ளவே அரசாங்கம் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply