தைவானில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
தைவானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹூவாலியன் நகரில் நேற்று காலை 6.21 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவாகி உள்ளது என மத்திய தரைக்கடல் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தரைமட்டத்தில் இருந்து 28 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிலநடுக்கத்தால் பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply