கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் 3 மணித்தியாலங்களில் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள்
கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் நிறுவப்பட்ட புதிய பி.சி.ஆர் ஆய்வகம், வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கான சோதனை நடவடிக்கையை ஆரம்பித்தது.
அதன்படி, ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்ட முதல் இலங்கையர் ஜப்பானிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமானத்தில் வந்தவரென தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த முதல் வெளிநாட்டவர் சோதனைக்குட்படுத்தப்பட்டார். அவர் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தினூடாக நாட்டுக்கு வருகை தந்தார்.
அதனைத் தொடர்ந்து விமான நிலையத்தின் புதிய பி.சி.ஆர் ஆய்வகத்தில் பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.,
இதன்மூலம் 3 மணித்தியாலங்களில் பரிசோதனை முடிவுகளை பெறக்கூடியவாறு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply