மாலியில் பயங்கரவாத தாக்குதல் : 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

மாலி நாட்டின் தென்மேற்கே கவுலிகொரோ பகுதியில் ராணுவ சோதனை சாவடி ஒன்று அமைந்துள்ளது. இதில், வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், சாவடி மீது பயங்கரவாத கும்பல் ஒன்று திடீரென தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் அந்நாட்டு ஆயுத படையை சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். 14 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை அரசு படைகள் உறுதிப்படுத்தி உள்ளன. இந்த தாக்குதலில் காயமடைந்த 3 ராணுவ வீரர்களை ஹெலிகாப்டர் உதவியுடன் சம்பவ பகுதியில் இருந்து மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதேபோன்று, ராணுவ வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதிகளில் 6 பேர் வரை கொல்லப்பட்டு உள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply