இப்போது டான் தமிழ் ஒளி யாழ்ப்பாணத்திலும்

டான் தமிழ்ஒளி இன்று (27.07.2009) முதல் யாழ்ப்பாணத்தில் தனது பிராந்திய சேவையை ஆரம்பித்திருக்கின்றது. சாதாரண தொலைக்காட்சி அன்ரனாக்கள் (யு.எச்.எவ்) மூலம் இனி யாழ்ப்பாணத்தில் டான் தமிழ்ஒளி தொலைக்காட்சியை மக்கள் பார்க்க முடியும். 2000ம் ஆண்டு  முதல் பிரான்ஸ் தலைநகர் பாரிசிலிருந்து ஒளிபரப்பாகிவந்த டான் தமிழ்ஒளி தொலைக்காட்சி கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் முதல் கொழும்பிலிருந்து தனது ஒளிபரப்பை நடாத்திவருகின்றது.

ஆசிய நாடுகள் எங்கும் யமல் சட்டலைற் ஊடாகவும், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஹொட்பேர்ட் சட்டலைற் ஊடாகவும் ஒளிபரப்பாகிவரும் டான் தமிழ்ஒளி முதல்தடவையாக கடந்த மாதம் வவுனியாவில் சாதாரண தொலைக்காட்சி அன்ரனாக்களினுடாகப் பார்க்கக்கூடியவாறு தனது வன்னிப் பிராந்திய ஒளிபரப்பை ஆரம்பித்தது. இன்று முதல் (27.07.2009)யாழ்ப்பாணத்திலும் சாதாரண தொலைக்காட்சி அன்ரனாக்களினு டாகப் பார்க்கக்கூடியவாறு தனது யாழ்ப்பாண பிராந்திய ஒளிபரப்பை ஆரம்பித்துள்ளது. இனி வரும் காலங்களில் யாழ்ப்பாணத்திலும் சாதாரண தொலைக்காட்சி அன்ரனாக்களின் மூலம் டான் தமிழ் ஒளி தொலைக்காட்சியை மக்கள் பார்க்க முடியும். யாழ்ப்பாணத்தில் இதற்கென ஒளிபரப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளதுடன் தனியான கலையகம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாணத்திலிருந்து நேரடி நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவதாக டான் நிறுவனத்தின் இயக்குநர்நாயகம் எஸ்.எஸ். குகநாதன் தெரிவித்திருக்கிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply