ஜெர்மனியில் உயரும் கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 61 லட்சத்தைக் கடந்தது
சீனாவின் வுகான் நகரில் தோன்றி 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவி உள்ளது. தற்போது இந்த தொற்று நோய் ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்டுள்ளது.
இந்நிலையில், ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 36 ஆயிரத்து 886 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இத்துடன் சேர்த்து அந்த நாட்டில் இந்த தொற்றுக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 61 லட்சத்து 34 ஆயிரத்து 363 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 196 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதுவரை அங்கு 1 லட்சத்து 3 ஆயிரத்து 504 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவில் இருந்து 50.58 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து உள்ளனர். 9.72 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply