கனடாவில் சோகம் – சாலை விபத்தில் சிக்கி இந்திய மாணவர்கள் 5 பேர் பலி
கனடாவின் டொரண்டோ பகுதியில் இந்திய மாணவர்கள் சிலர் கடந்த சனிக்கிழமை அண்ரு ஒரு வேனில் பயணம் செய்துள்ளனர்.அப்போது எதிரே வந்த டிராக்டரில் வேன் மோதியது.
இந்த விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கனடா விபத்து குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ள கனடாவுக்கான இந்திய ஆணையர் அஜய் பிசாரியா உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததுடன், இந்திய துணை தூதரக குழு மாணவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருகின்றன என பதிவிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply