ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு இன்று தொடக்கம்; உக்ரைனுக்கு வேட்பாளர் அந்தஸ்து கிடைக்குமா..?
பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 2 நாள் மாநாடு இன்று தொடங்குகிறது. இதில், உக்ரைனை வேட்பாளராக 27 உறுப்பு நாடுகளும் அங்கீகரிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. நேட்டோவில் இணையக் கூடாது என்ற வலியுறுத்தலை ஏற்காததால் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைனுக்கு நிதி உதவி மற்றும் ஆயுத உதவி செய்து வரும் ஐரோப்பிய ஒன்றியம், அந்நாட்டை உறுப்பினராக சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏனென்றால் உறுப்பு நாடு என்றால்தான் நேரடியாக ராணுவ உதவி செய்ய முடியும். ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது என்பது எளிதான காரியம் அல்ல.
அதற்கான நடைமுறைகள் முடிந்து இறுதிக்கட்டத்தை அடைய பல ஆண்டு காலம் ஆகும். உக்ரைன் கடந்த பிப்ரவரி 28 அன்றுதான் விண்ணப்பமே கொடுத்துள்ளது. அதேநேரத்தில் அந்நாட்டுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முதலில் வேட்பாளர் அந்தஸ்து வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. அதேபோல் மால்டோவா நாட்டுக்கும் இன்று வேட்பாளர் அந்தஸ்து வழங்கப்படும் என்று தெரிகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply