போதைப்பொருளுக்காக துறவிகள் வேடம் பூண்ட ஐவர் கைது

போதைப்­பொருள் வாங்­கு­வ­தற்கு பணம் சேக­ரிப்­ப­தற்­காக பௌத்த துற­விகள் வேடத்தில் நட­மா­டிய குற்­றச்­சாட்டில் 5 பேரை தாய்­லாந்து பொலிஸார் கைது செய்­துள்­ளனர். இவர்கள் ஐவரும் கம்­போ­டி­யாவைச் சேர்ந்­த­வர்கள் என செய்­திகள் வெளி­யா­கி­யுள்ன.

தாய்­லாந்தின் காவோ போ தோங் மாவட்­டத்தில் வைத்து இவர்கள் கைது செய்­யப்­பட்­டனர்.இவர்­களின் நட­வ­டிக்­கைகள், பௌத்த துற­வி­களின் நட­வ­டிக்­கை­களைப் போன்று இல்­லா­தி­ருப்­பதை அவ­தா­னித்த உள்ளூர் மக்கள் இவர்கள் குறித்து சந்­தே­க­ம­டைந்­தனர்.

துற­விகள் வேடத்­தி­லி­ருந்த இவர்­க­ளுக்கு, உணவு, நீர் போன்­ற­வற்றை மக்கள் வழங்­கும்­போது அவற்றை இந்­ந­பர்கள் ஏற்க மறுத்­தனர்.

மக்­க­ளி­ட­மி­ருந்து எப்­போதும் பணத்தை மாத்­தி­ரமே பெறு­வ­தற்கு இவர்கள் ஆர்வம் காட்­டினர் என உள்ளூர் மக்கள் தெரி­வித்­துள்­ளனர்.

இது குறித்து பொலி­ஸா­ருக்கு தகவல் தெரி­விக்­கப்­பட்ட பின்னர், மலைப்­ப­கு­தி­யி­லுள்ள ஆல­ய­மொன்றில் பொலிஸார் தேடுதல் நடத்­தினர். இதன்­போது 5 சந்­தேக நபர்­களும் சிக்­கினர்.

சுமார் 10 பேர் இம்­மோ­ச­டியில் ஈடு­பட்­டி­ருக்­கலாம் என பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர். பொலி­ஸாரின் முற்­று­கை­யின்­போது ஏனைய சந்­தேக நபர்கள் தப்­பி­யோ­டி­விட்­டனர் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆல­யத்தில் எஞ்­சி­யி­ருந்த சந்­தேக நபர்­க­ளிடம் பொலிஸார் ஆவ­ணங்­களை கேட்­ட­போது, ஆவ­ணங்­களை சமர்­பிக்க அவர்­களால் முடி­ய­வில்லை.

அதை­ய­டுத்து மேல­திக விசா­ர­ணைக்­காக அவர்­களை பொலிஸார் கைது செய்­தனர். இவர்கள் கம்­போ­டி­யா­வி­லி­ருந்து எல்­லையைக் கடந்து தாய்­லாந்­துக்கு வந்­த­வர்கள் என விசா­ர­ணையில் தெரி­ய­வந்­துள்­ளது.

சந்­தேக நப­ர­்களில் இருவர் போதை யில் காணப்­பட்­டனர். தாம் போதை­ப்­ பொ­ருளைப் பயன்­ப­டுத்­தி­யுள்­ள­தாக அவர்கள் இரு­வரும் பொலி­ஸா­ரிடம் ஒப்­புக்­கொண்­டனர் என உள்ளூர் ஊட­கங்கள் தெரிவித்துள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply