எம்முடன் இணைந்து நிற்க ஒரு சிலருக்கு முடியாது என்பது நியாயமானது:சஜித் பிரேமதாஸ

எங்களுடன் ஒன்றிணைந்து நிற்க முடியாது என ஒரு சிலர் கூறுவதாகவும், எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு இந்நாட்டின் சுகாதார கட்டமைப்பிற்கு மூச்சு திட்டத்தின் ஊடாக பல்லாயிரம் கோடி ரூபா கணக்கில் உதவிகள் செய்யும் என்னுடன் அவர்களால் இணைய முடியாது என்று கூறுவது நியாயமானது தான் என்றும், எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டு இந்நாட்டின் சிறார்களுக்கு சக்வல (பிரபஞ்சம்) திட்டத்தின் ஊடாக எண்ணில் அடங்காத சேவைகளை செய்யும் என்னுடன் இணைய முடியாது என்று அவர்கள் கூறுவது நியாயமானது தான் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஜனநாயகத்திற்கு எதிராக அரசாங்கம் செயற்படும் போது, ​​நிபந்தனையின்றி அதனை எதிர்த்து வீதிக்கு இறங்கும் எம்முடன் இணைந்து நிற்க ஒரு சிலருக்கு முடியாது என்பது நியாயமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் போராட்டம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை அமைதியான முறையில் போராட்டத்திற்காக ஆதரவாக நின்ற நம்முடன் அவர்களால் இணைய முடியாது என்பது நியாயம் தான்.

இந்நாட்டில் ஜனநாயகத்திற்காக போராடுவதற்கு எங்கு இருந்து அழைப்பு விடுக்கப்பட்டாலும் அதற்காக நாங்கள் முன்நிற்போம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நேற்று (05) இடம் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கலாவெவ தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் சனத்தொகையில் 5.7 மில்லியன்,அதாவது 26% பேருக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாகவும், 96% மக்கள் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் கூறுவதாக நினைவு கூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்,கட்டுப்படுத்த முடியாத பட்டினியின் கொடுமையால் மாணவ மாணவிகள் வகுப்பறையில் மயங்கி விழுவதாகவும்,குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் ஊட்டச்சத்து குறைப்பாட்டுக்கு வேகமாக உள்ளாகுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டிற்கு உணவளித்த விவசாயிகள் வெறிச்சோடிய வயல் நிலங்களை பார்த்து பெருமூச்சு விடுவதாகவும், நாட்டின் இளைஞர்கள் வேலையின்மை வரிசையில் சேர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை ஒரு சிலரினால் மகிந்த ராஜபக்ச தலைமையிலான கும்பல் எழுச்சி பெற முயற்சிப்பதாகவும் அந்த குற்ற கும்பலுக்கு மிகவும் கவனமாக ஜனாதிபதி ஒட்சிசன் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அரச அடக்குமுறையும், அரச பயங்கரவாதமும் நாடு முழுவதும் ஊசலாடுவதாகவும் அதற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கும் போது, ​அரசாங்கமும் அரசைக் பாதுகாக்க முன் நிற்பவர்களும் குழப்பம் அடைவது ஆச்சரியமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply