ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது

மட்டக்குளி பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 14 கிராம் 327 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 25, 31, 33 மற்றும் 34 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்கள் பொரளை மற்றும் வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களுக்குள் நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply