சர்வதேச நிதியத்திடம் கடன் உத்தரவாதம் வழங்கிய இந்தியாவுக்கு இலங்கை நன்றி

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை அரசு, சர்வதேச நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டாலர் (சுமார் ரூ.20 ஆயிரம் கோடி) அளவுக்கு கடன் கோரியுள்ளது. ஆனால் இதற்கு, இலங்கைக்கு கடன் கொடுத்து வரும் இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிடம் இருந்து கடன் உத்தரவாதத்தை சர்வதேச நிதியம் கோரியுள்ளது.

இதைத்தொடர்ந்து மத்திய அரசு இந்த கடன் உத்தரவாதத்தை வழங்கி இருக்கிறது. இந்த கடிதத்தை மத்திய நிதியமைச்சகம் சமீபத்தில் வழங்கி விட்டது. இதைப்போல இலங்கைக்கு கடந்த வாரம் சென்றிருந்த வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் நேரிலும் தெரிவித்தார்.

தகுந்த நேரத்தில் இந்தியா வழங்கியிருக்கும் இந்த உதவிக்கு இலங்கை நன்றி தெரிவித்து உள்ளது. சர்வதேச நிதியம் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இந்தியா தனது உத்தரவாதத்தை வழங்கி இருப்பதாக இலங்கையின் மத்திய வங்கி கவர்னர் நந்தலால் வீரசிங்கே வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறி உள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply