3000 ரூபாய்க்காக தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் அடித்துக் கொலை:அரியானாவில் நடந்த பயங்கரம்

அரியானா மாநிலம் குருகிராம் அருகே 3000 ரூபாய் பணத்திற்காக தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிலாஸ்பூர் பகுதியின் கோஷ்கர் கிராமத்தைச் சேர்ந்தவர் இந்தர் குமார் (வயது 33). தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர் தனது வீட்டில் மளிகை கடை வைத்திருந்தார். இவர் அந்த ஊரைச் சேர்ந்த சாகர் யாதவ் என்பவருக்கு 3000 ரூபாய் பணம் கொடுக்கவேண்டியிருந்தது.

இந்த பணத்தை கொடுக்காமல் நீண்ட நாட்களாக இழுத்தடித்து வந்துள்ளார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சாகர் யாதவ் மற்றும் மூன்று பேர் சேர்ந்து, இந்தர் குமாரை கம்புகளால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இந்தர் குமாரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் இந்தர் குமார் உயிரிழந்தார். இது தொடர்பாக பிலாஸ்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாகர் யாதவ், ஆசாத், முகேஷ், ஹிதேஷ் ஆகிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply