ஓட்டல் பெண் ஊழியருக்கு காரை டிப்சாக வழங்கிய யூ-டியூபர்
யூ-டியூபர்களில் சிலர் மிகவும் பிரபலமானவர்களாக திகழ்கிறார்கள். அந்த வகையில் ஜிம்மி டொனால்ட்சன் என்ற யூ-டியூபர் உலக அளவில் அதிகம் பேர் பின் தொடரும் பிரபலமான யூ-டியூபராக திகழ்கிறார். இவர் மிஸ்டர் பீஸ்ட் என்ற பெயரில் வீடியோக்களை யூடிப்பில் பதிவிட்டு வருகிறார்.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றிய ஒரு வீடியோ 11 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. ஜிம்மி டொனால்ட்சன் ஒரு ஓட்டலில் பணியாளராக பணியாற்றும் பெண் ஊழியருக்கு புத்தம் புதிய காரை பரிசாக கொடுத்துள்ளார். இதனை தனது வீடியோ பதிவில் யாரேனும் எப்போதாவது ஒரு காரை டிப்சாக கொடுத்துள்ளீர்களா? நான் எனது கருப்பு நிற டயோட்டா வாகனத்தை கொடுக்கிறேன் என கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply