அமெரிக்காவில் துணிகரம் வீட்டுக்குள் புகுந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சான் ஜசிண்டோ நகரை சேர்ந்த நபர் ஒருவர், இரவில் தனது வீட்டின் முன் நின்று வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தார். அண்டை வீட்டில் இருந்தவர்கள் தூங்க முடியாமல் சிரமப்பட்டனர். இதனால் அந்த வீட்டில் இருந்த நபர்கள் சிலர் வெளியே வந்து, அந்த நபரிடம் அதை நிறுத்தும்படி கூறினர்.

அவர்கள் அந்த நபரை திட்டிவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டனர். அதன்பின் அந்த நபர் துப்பாக்கியுடன் அண்டை வீட்டுக்குச் சென்று கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவதுபோல சுட்டுத் தள்ளினார். இதில் 3 பெண்கள், 8 வயது சிறுவன் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தப்பிச் சென்ற அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply