அகதிகளின் மீள்குடியமர்வை விரைவுபடுத்த ஐரோப்பிய ஒன்றியம் பஸிலிடம் வலியுறுத்து
வடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியமர்வை விரைவு படுத்துவதுடன் அபிவிருத்திப் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசைக் கேட்டுள்ளது. ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பஸில் ராஜபக்ச பிரஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார ஆணையாளருடன் நடத்திய சந்திப்பின் போது மேற்கண்ட கோரிக்கை விடுக்கப்பட்டதாக பிரஸல்ஸில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்நாட்டில் இடம் பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வு தொடர்பாக இந்தக் கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது. இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வுக்கு இலங்கை அரசாங்கம் தேவையான ஏற்பாடுகளையும் நடவடிக்கைகயும் மேற்கொண்டு வருகிறது. மக்களின் மீள்குடியமர்வை உறுதி செய்துவருகின்றது என்று பஸில் ராஜபக்ஷ ஆணையாளருக்கு எடுத்துக் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியம் இந்தச் செயற்பாட்டுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருவதாக அவர் ஒன்றிய ஆணையாளர் பஸிலிடம் தெரிவித்தார். இந்தச் சந்திப்பில் பெல்ஜியம் இலங்கைத் தூதுவர் ரவீந்திர ஆரியசிங்க, திறை சேரிச் செயலாளர் பி.வி.ஜெயசுந்தர ஆகியோர் கலந்துகொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply