ஹிலாரியின் கருத்து தவறென அவரே ஒப்புக் கொண்டுள்ளார் : பாதுகாப்பு அமைச்சு
இலங்கையில் இடம்பெற்ற மோதல்களின் போது பாலியல் வல்லுறவும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்த கருத்து தவறுதலாக இடம்பெற்ற ஒன்றென அவர் ஏற்றுக்கொண்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே ஹிலாரியின் உரையில் இலங்கையின் பெயர் உள்ளடக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹிலாரி கிளிண்டனிடம் குறித்த அறிக்கையை எழுதிக்கொடுத்த நபர், இலங்கை தொடர்பாகவும் கூறியுள்ளதுடன் இது வேண்டுமென்றே நாட்டை அசௌகரியத்திற்குள்ளாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹிலாரி தனது குறிப்பில் பொஸ்னியா, பர்மா, இலங்கை உட்பட மற்றும் பல நாடுகளில், பெண்கள் மீதான பாலியல் வல்லுறவும் யுத்த ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டதெனத் தெரிவித்திருந்ததாகக் கூறப்பட்டிருந்தது.
எனினும் தூதுவரின் தற்போதைய கூற்றுப்படி, 2006 ௨009 இடைப்பட்ட கால கட்டத்தில் யுத்த ஆயுதமாக பாலியல் வல்லுறவு பயன்பட்டதாகத் தங்களுக்கு எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இதன் பின்னணியில் எவரேனும் இருக்கக்கூடும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழ்ச்சித் திட்டத்தின் பின்னணியில் சில சக்திகள் இருக்கக் கூடுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் அமெரிக்க ராஜாங்கச் செயலாளருக்கு அறிக்கையைக் குறித்துக் கொடுத்த நபர் தொடர்பாக ஹிலாரி கிளிண்டனும் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எது, எவ்வாறெனினும், தற்போது இடம்பெயர் முகாம்களிலுள்ள 250,000 மக்களை விடுவிப்பது தொடர்பான பிரச்சினைக்கே இலங்கை அரசு முகங்கொடுக்க வேண்டியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply