இலங்கை மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டிய அவசியமில்லை: கருணா அம்மான்
தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டிய அவசியமில்லை என தேச நிர்மான அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அகதி முகாம்களில் சுமார் 200,000 இலங்கைத் தமிழ் அகதிகள் தஞ்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் தற்போது நிலைமைகள் சுமூகமான சூழ்நிலை காணப்படுவதாகவும், இதனால் இந்திய மத்திய அரசு இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டிய அவசியமில்லை என எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள மக்களை இலங்கைக்கு மீள அழைத்துக் கொள்ள இதுவே சிறந்த தருணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள தமிழ் மக்களுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டுமென தமிழக முதல்வர் கருணாநிதி மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply