உக்ரைன் பாதுகாப்புத்துறை மந்திரி பதவி நீக்கம் : ஜெலன்ஸ்கி உத்தரவு
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 550 நாட்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் பாதுகாப்புத்துறை மந்திரி ஒலெக்சி ரெஸ்னிகோவ் பதவிநீக்கம் செய்யப்படுவதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகத்தில் புதிய அணுகுமுறையை ஏற்படுத்த இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அவர் கூறினார். மேலும் உக்ரைனின் பாதுகாப்புத்துறை மந்திரி பதவிக்கு ரஸ்டம் உமெரோவ் என்ற நபரை ஜெலன்ஸ்கி பரிந்துரை செய்துள்ளார். தனது பரிந்துரையை நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளும் என்று நம்புவதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply