இன்று முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கிறது
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலைச் சூத்திரத்தின் பிரகாரம் இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிவாயு விலை உயர்வை கருத்தில் கொண்டு நாட்டில் எரிவாயு விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கும் நிலையில் அதன் புதிய விலை 3,127 ரூபாவாகும்.
5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 58 ரூபாவால் அதிகரிக்கும் நிலையில் அதன் புதிய விலை 1,256 ரூபாவாகும்.
2.3 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 26 ரூபாவால் அதிகரிக்கும் நிலையில் அதன் புதிய விலை 587 ரூபாவாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply