கிழக்கு ஆளுநரின் வழிகாட்டலின் கீழ் திருகோணமலையில் காணாமல் போன இஸ்ரேலிய பெண் மீட்பு

இஸ்ரேலில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 25 வயதுடைய பெண் சுற்றுலா பயணி ஒருவர், 3 நாட்களுக்கு முன்பு திருகோணமலையில் மர்மமான முறையில் காணாமல் போன நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலையீட்டில், 10 மணித்தியாலத்திற்குள் குறித்த பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

மீட்பு பணியில் பொலிஸ், இராணுவம், பிரதேச செயலகம், உப்புவேலி பிரதேச சபை, சுற்றுலாப் பணியகம் ஆகியவற்றை ஈடுபடுமாறு ஆளுநரால் விடுக்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய, குறித்த தரப்பினர் தேடுதல் பணியில் ஈடுப்பட்டு, காணாமல் போன பெண்ணை மயங்கிய நிலையில் சல்லி கோவிலுக்கு அருகில் (29) மீட்டுள்ளனர்.

குறித்த பெண்ணை மருத்துவ பரிசோதனையின் பின், இஸ்ரேல் தூதரகத்தில் ஒப்படைக்குமாறு ஆளுநரால் கிழக்கு மாகாண சுற்றுலா பணியத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply