தம்புள்ளை வீதியில் வாகன விபத்து; இருவர் உயிரிழப்பு
குருநாகல் – தம்புள்ளை வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்றையதினம் (01-07-2024) திங்கட்கிழமை அதிகாலை கலேவெல நகரத்தில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குருநாகலில் இருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி, பூந்தொட்டியில் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த இருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில், தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரொருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காரியமடித்த மற்றும் லக்கல பகுதிகளைச் சேர்ந்த 28 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply